கனடா செய்திகள்

அமெரிக்காவுடன் கலந்துரையாடலுக்கு தயாராக உள்ளதாக கனடா அறிவிப்பு

16 May 2017

வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உள்படிக்கை (NAFTA) தொடர்பில் அமெரிக்காவுடன் மீளாய்வுக் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய வர்த்தக பிரதிநிதியாக  ரொபேர்ட் லைட்டைசர் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து கனடா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கனேடிய மத்திய அரசாங்கம் அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவின் புதிய வர்த்தக பிரதிநிதியின் நியமனம் கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உள்படிக்கை தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடலை விரைவில் ஆரம்பிப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதை கனேடிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha