உலகம் செய்திகள்

அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு அலோசகர் ராஜினாமா

17 Feb 2017

அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். டிரம்ப் ஆட்சிக்கு வரும் முன்னரே இவரை தேசிய பாதுகாப்பு அலோசகராக நியமித்தார். 

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்தார்.

  டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக மைக்கேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

  இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha