இந்தியா செய்திகள்

அரசு விழா மேடையில் தூங்கிய முதல்வர்!

21 Apr 2017

முதல்வர் சித்தராமய்யா கர்நாடக அரசு விழாவில் கலந்துகொண்டபோது விழா மேடையில் கண்ணயர்ந்து தூங்கிவிட்டார். இச்சம்பவம் இப்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(20/04/2017) நடைபெற்றது. அதில் முதல்வர் சித்தராமய்யா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார். அதையடுத்து, விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் திடீரென கண்ணயர்ந்து மேடையிலேயே தூங்கிவிட்டார்.

அப்போது அவரது கண்ணாடி கழன்று விழுந்தது. இதனால், உடனே அவர் கண் விழித்தார். பின்னர், கீழே விழுந்த கண்ணாடியை நரேந்திரசாமி எம்.எல்.ஏ. எடுத்து அவரிடம் கொடுத்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் நேற்று(20/04/2017) கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்று பொதுநிகழ்ச்சியில் சித்தராமய்யா தூங்குவது இதுவொன்றும் புதிதல்ல. ஏற்கெனவே சட்டசபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெற்றபோது சித்தராமய்யா தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. அப்போது இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha