உலகம் செய்திகள்

அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

19 Apr 2017

இந்திய - சீன எல்லையில் உள்ள 3488 கி.மீ., தூரம் வரையிலான பகுதியை 1962 போரின் போது சீனா கைப்பற்றியது. இந்தியாவால் அருணாச்சல பிரதேசம் என அழைப்படும் பகுதியை சீனா தெற்கு திபெத் என்றே அழைத்து வருகிறது. இந்தியா - சீன இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதுவரை 19 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா இந்தியா வருவதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மறைமுகமாக பலமுறை எச்சரிக்கையும் விடுத்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமா இந்தியாவிற்கு வந்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவை பழிவாங்குவதற்காக அருணாச்சலில் உள்ள 6 பகுதிகளின் பெயர்களை மாற்றி, சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திபெத்திய மற்றும் ரோமன் பெயர்களைக் கொண்ட வோஜியான்லிங், மிலா ரி, சோய்டெங்கார்போ ரி, மெயின்குகா, புமோ லா, நம்கபுப் ரி ஆகிய இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. சீனாவின் இந்த செயல்பாட்டால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha