உலகம் செய்திகள்

ஆஸ்திரேலியாவை உளவு பார்ப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு

12 May 2017

தனது நெருக்கமான வர்த்தக கூட்டாளியான ஆஸ்திரேலியாவை ஆழமாக உளவு பார்ப்பதாக சீனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிப்படையாக ஆஸ்திரேலியா சீனா மீது குற்றஞ்சாட்டியது கிடையாது. இக்குற்றச்சாட்டை மூத்த பாதுகாப்புத்துறைச் செயலர் ஒருவரே கூறியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சீனா உளவு பார்ப்பது குறித்து 2015 ஆம் ஆண்டு முதலே பேசப்பட்டு வருகிறது. அப்போது டார்வின் துறைமுகத்தில் கட்டுமானப்பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சீன நிறுவனத்திற்கு சீன இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இதையடுத்து பல சீன நிறுவனங்கள் கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பதை ஆஸ்திரேலியா தடை செய்து வந்தது. இப்பேச்சுகு பதிலடி கொடுத்த சீன அதிகாரி ஒருவர் இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்து பலனளிக்கும் வகையில் பேச வேண்டுமே தவிர இப்படி பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்றார்.

இதனிடையில் சீனாவின் உளவு முயற்சிகளை தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் மூலமும், உடன்படிக்கை மூலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியத் துறைகளில் போடப்படும் முதலீடுகளை ஆராய்ந்து அவற்றில் வில்லங்கங்கள் இருப்பதை உறுதிப்படுத்த தனித்த அதிகாரி ஒருவரையும் நியமித்துள்ளது அரசு.

அஸ்திரேலியாவில் வாழும் சீனர்கள் மத்தியில் சீன உளவு அமைப்புகள் ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு நினைக்கிறது. அவர்கள் மீது கண்காணிப்பை அரசு அதிகப்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha