வாழ்வியல் செய்திகள்

ஆஸ்துமா இறப்பை தடுக்கலாம்! இன்று உலக ஆஸ்துமா தினம்

01 May 2017

ஆஸ்துமா, மருத்துவ உலகின் தீண்டாமை நோய். இந்தியாவில், மூன்று கோடி பேர் உட்பட, உலகில், 30 கோடி பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மோனலிசாவின் மர்மமான புன்னகை போல், மருத்துவர்களும் புரிந்து கொள்ள முடியாத நோயாக, ஆஸ்துமா உள்ளது. இதற்கு, ஈளை நோய், ஈஸ்னோபிளியா, அல்லுமாந்தம், வீசி பிரான்கைடிஸ் போன்ற பல பெயர்கள் உள்ளன.

ஆஸ்துமா, நம் மூச்சுக்குழலின் உட்பகுதியில் வீக்கம், தசைச்சுருக்கம், அதிக சளியை சுரக்கும் தன்மையும் ஏற்படுத்தும். சுவாசக்கோளாறு, தொடர் இருமல், மூச்சு இரைப்பு, மூச்சு விடும் போது விசில் சத்தம், மார்பில் இறுக்கம், சோர்வு போன்றவை தான், ஆஸ்துமா நோயின்

சிறு குழந்தைகள், முதியவர்களுக்கு, இரவு, கடின உடற்பயிற்சி நேரம், சிரித்தல், பேசுதல் போன்ற செயல்களின் ஏற்படும் தொடர் இருமல், ஆஸ்துமாவின் வெளிப்பாடாக இருக்கலாம். இதை, ஆங்கிலத்தில், 'காப் வேகன்ட் ஆஸ்துமா'

என்பர். அலர்ஜி, மரபணு கோளாறுகளே, ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணங்கள்.

* காற்று ஒவ்வாமை என்பது, சுவாசக் காற்றின் மூலம் வரும் ஒவ்வாமை, வாகனப்புகை, தொழிற்சாலைகளின் நச்சுப்புகை, கட்டுமானப்பணிகளில் வெளியேறும் துாசு, மரங்களின்

மகரந்தம், பலவிதமான வாசனைகள், துர்நாற்றங்கள், சிகரெட் புகை, கொசுவத்திகள், காற்றில் ஏற்படும் ஈரப்பத மாற்றங்கள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் அருகாமை உள்ளிட்டவற்றால் ஒவ்வாமை ஏற்படும்

* உணவு ஒவ்வாமை என்பது, பால், முட்டை, இறால், கருவாடு, நண்டு, கடலை, முந்திரி, பிஸ்தா போன்றவற்றால் ஏற்படலாம். செயற்கை வண்ணம், வாசனை, பதப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்த துரித உணவு, 'ஜங்க் புட்' எனப்படும், உடல் எடையை அதிகரிக்கும் தின்பண்டங்களால் ஒவ்வாமை ஏற்பட லாம்

* தச்சர்கள், கட்டட பணியாளர்கள், வேதி தொழிற்சாலை ஊழியர்கள், பீடி சுற்றுவோர் உள்ளிட்டோருக்கு தொழில் ரீதியான

* மரபணுக்கள் மூலம் தலைமுறை தலைமுறையாக தொடரக்கூடியது நோய் ஆஸ்துமா. அதனால், நெருக்கமான சொந்தத்தில், திருமணம் செய்து கொள்ள கூடாது. அதாவது, மரபணு பாதி, மாசுத்தன்மை பாதி; இரண்டும் கலந்த கலவை தான்

கணினி மூலம், நுரையீரல் செயல் திறனை அறியும், 'ஸ்பைவோமெட்ரி - பி.எப்.டி.,' என்ற எளிய சோதனை மூலம் ஆஸ்துமாவின் தாக்கத்தை துல்லியமாக அறியலாம். 6 வயதுக்கு முன், இப்பரிசோதனை செய்வது கடினம். தொடர் இருமல், தொடர் சளி, நெஞ்சு சளி, தொடர் மூச்சுத்திணறல், மூச்சுவிடும் போது விசில் சத்தம், விலா எலும்புகளின் இடையே தசைகள் உள்நோக்கி போவது போன்ற வெளிப்பாடுகளை, தொடர்ந்தோ, விட்டுவிட்டோ குழந்தை

களிடம் கண்டால்,ஆஸ்துமா இருப்பதை அறியலாம். இப்பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு, ஒவ்வாமை தரும் பல பாதிப்புகளும் சேர்ந்தே இருக்கலாம். மூக்கில் நீர் வடிவது, மூக்கு அடைப்பு, சைனஸ் பாதிப்பு, தோல் உலர்தல், அரிப்பு, கண்கள் சிவப்பு, கண் அரிப்பு, இப்படி பலவும் ஆஸ்துமாவை காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள்.

ஆஸ்துமாவிற்கு, பாதுகாப்பான, மிகவும் பயனுள்ள, எளிமையான பலரின், பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய எளிமையான தீர்வு, ஆங்கில மருத்துவத்தில் மட்டுமே உள்ளது. மாற்று மருத்துவம் என்பது, ஏமாற்று வேலை.

ஆஸ்துமா நோயால் ஏற்படும் நாள்பட்ட மூச்சுக்குழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, மூச்சுக் குழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும். இதற்கு, நோயின்

தீவிரத்தை பொறுத்து, பல மாதங்களோ, பல ஆண்டுகளோ தினமும், 'ஸ்டீராய்டு இன்ஹேலர்' எடுப்பது அவசியம்.

அதாவது, ஸ்டீராய்டு இன்ஹேலர், மாத்திரை, ஊசி போல் பாதிப்பு, பக்க விளைவுகளை தராது. அது, மூச்சுக்குழலின் பாதிப்பை சரி செய்த பின், சக்தி இழந்த நிலையில் தான் ரத்தத்தில் கலக்கும்.

எனவே, தொடர் உபயோகத்திலும், உடல் பாதிப்பு ஏற்படாது. இன்ஹேலர், போதை மருந்து போல் அடிமைப்படுத்தாது. ஆஸ்துமா பாதிப்பை கட்டுப்படுத்திய பின், ஸ்டீராய்டு இன்ஹேலர் மருந்தை நிறுத்தி விட முடியும்.

தவறான சிகிச்சை முறைகளால் ஆஸ்துமா மரணங்கள் சாத்தியம். சரியான சிகிச்சை அளித்தால், அதை தவிர்க்கலாம்என்பதே சத்தியம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha