உலகம் செய்திகள்

இந்தியா-சிங்கப்பூர் கடற்படை போர் ஒத்திகை

19 May 2017

இந்தியா- சிங்கப்பூர் இடையேயான கடற்படை போர் ஒத்திகை மற்ற நாடுகளின் உறவை பாதிக்கும் விதமாக இருக்க கூடாது என சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா- சிங்கப்பூர் நாடுகள் இடையே தென்சீன கடல் பகுதியில் 7 நாள் போர் ஒத்திகை நேற்று (மே 18)துவங்கியது. இது சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யீங்க் கூறியது, தென் சீன கடல் பகுதியில் பெருமளவு இயற்கை வளங்கள் சீனாவுக்கே சொந்தம் .இப்பகுதியில் இந்தியா சீனா போர் ஒத்திகை நடத்துவது மற்ற நாடுகளின் மனதை புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது. இதுபோன்ற செயல் நட்பு நாடுகளின் பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்., சீனாவை பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் நட்புறவு கொள்வதையே விரும்புகிறது. ஆனால் இந்தியா-சிங்கப்பூர் நாடுகளின் இந்த செயல் சரியல்ல என்றார்.

இரு நாடுகள் தரப்பில் கூறுகையில், கடந்த 1994-ம் ஆண்டே இந்தியா- சிங்கப்பூர் இடையே ராணுவ ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று 24-வது கடற்படை போர் ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது என கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha