இந்தியா செய்திகள்

உத்தரகாண்ட்டில் கடும் நிலச்சரிவு

19 May 2017

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஹதி பர்வட் என்ற பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில், சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர், பத்ரிநாத்துக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், பத்ரிநாத் யாத்திரையும் தடைபட்டுள்ளது.

 இதனால், ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுமார் 60 மீட்டர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மக்களை மீட்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன.

 குறிப்பாக, பத்ரிநாத்திலுள்ள சிதைபொருள்களை அகற்றுவதற்கு, குறைந்தது இரண்டு நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha