இந்தியா செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்! இந்த ஆண்டும் மாணவிகளே முதலிடம்…

19 May 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9,94,167 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். மேலும், தனித்தேர்வர்கள் 39,741 பேர்களும், சிறைக்கைதிகள் 224பேர்களும் தேர்வு எழுதினார்கள்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடியே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. இதில் மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.8 சதவிகிதம் கூடுதலாகும். இதில் 92.5 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவிகிதம் பேர் பெற்று இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே முதலிடம் வகிக்கின்றனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha