இந்தியா செய்திகள்

ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை

21 Apr 2017

ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 63 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  மூத்த குடிமக்களுக்கான சலுகை என்ற வயது வரம்பை 60 ஆக குறைத்து ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

60 -வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இந்த  50 சதவீத கட்டண சலுகையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha