இலங்கை செய்திகள்

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தீ விபத்து

19 May 2017

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில்  திடீரென்று தீ பரவியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை  நண்பகல் ஆசியர்களுக்கு கருத்தரங்கு  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த  வேளையில், அங்குள்ள மின் விசிறி ஆளியை அழுத்தியபொழுது திடீரென தீ பிடித்ததாக  ஏறாவூர்ப்பற்றுக் கோட்டம் 1 இன் கல்விப் பணிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இருப்பினும், பாரியளவில் சேதம் ஏற்படாத வகையில் உடனடியாகத் தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இச்சம்பவத்தினால் ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

குறித்த கட்டடமும் மின்சார உபகரணங்களுமே தீக்கிரையானதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha