கனடா செய்திகள்

கனடாவில் குடியேற போராடியவருக்கு கிடைத்தது வெற்றி

19 May 2017

கனடா நாட்டில் புகலிடம் பெறுவதற்காக கடுமையாக போராடிய அகதி ஒருவருக்கு ஆதரவாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டை சேர்ந்த Seidu Mohammed (24) என்பவர் கால்பந்து வீரர்.  ஓரினச்சேர்க்கையாளரான இவர் கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என கனவு கொண்டுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்ததும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

கானா நாட்டில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது குற்றமாகும். எனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த முகமது அமெரிக்காவில் புகலிடம் பெறுவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால், புகலிடம் கிடைப்பதற்கு முன்னதாக அமெரிக்காவிற்கு டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆனதால் முகமதுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்காவில் தனக்கு புகலிடம் கிடைக்க வாய்ப்பில்லை என எண்ணிய முகமது Razak Ioial(34) என்ற நண்பருடன் அண்டை நாடான கனடாவிற்கு செல்ல திட்டமிட்டார். நண்பர்களிடம் பணம் சேகரித்த முகமது வாகனம் ஒன்றில் ஏறி இருவரும் கனடா எல்லைக்கு வந்துள்ளனர்.

ஆனால், எல்லையில் கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. தேவையான ஆடைகள் இன்றி வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், முயற்சியை கைவிடாத முகமது மற்றும் அவரது நண்பர் என இருவரும் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே சென்றுள்ளனர்.

இரவும் பகலும் கடுமையான குளிரில் நடந்து சென்றதால் முகமதுவை வினோதமான நோய் ஒன்று தாக்கியுள்ளது. இறுதியாக, இருவரையும் சிலர் மீட்டு மனிடோபா நகருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், முகமதுவை நோய் தாக்கியதால் அவரது இரண்டு கை விரல்கள் அனைத்தையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்களும் அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர்.

முகமது அமெரிக்காவில் புகலிடம் கோரி அந்நாட்டிற்கு முதலில் சென்றதால் அவரை திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தன்னுடைய உடல்நிலை கருதி கனடாவிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என முகமது வழக்கு பதிவு செய்தார்.

நீண்ட விசாரணைக்கு பின்னர், கனடாவில் முகமது தொடர்ந்து தங்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் தங்குவதற்கு அனுமதி கிடைத்து விட்டதால் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளதாக முகமது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha