கனடா செய்திகள்

கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களிற்கு 50,000 டொலர்கள் வெகுமதி

18 May 2017

கடந்த வருடம் ரொறொன்ரோ ஜேம்சன்ரவுனில் இடம்பெற்ற கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களிற்கு 50,000 டொலர்கள் வெகுமதி வழங்கப்படும் என ரொறொன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மே 15ஆம் திகதி கன்டிஸ் றோசெலி பொப் எனப்படும் 33வயதுடைய பெண், கூடைப்பந்தாட்டம் பார்த்துவிட்டு வேறு மூவருடன் வாகனமொன்றில் வீடு திரும்பிய போது இனந்தெரியாத மர்ம நபரால் சுடப்பட்டார்.

மருத்துவனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் ஒரு மாதத்தால் இறந்துவிட்டது.

இந்நிலையில், கொலையாளியை கண்டுபிடிக்க தீவிரம் காட்டிவரும் பொலிஸார், கொலையாளி கைது செய்யப்படும் பட்சத்தில் இரு மரணங்களிற்கான குற்றம் சுமத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha