கனடா செய்திகள்

கல்கரி கல்விச் சபையின் புதிய தீர்மானம்

19 May 2017

கல்கரி கல்விச் சபை அடுத்த ஆண்டிலிருந்து வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை காலை 7.50இற்கு ஆரம்பித்து 11.30மணிக்கு முடிவடையச் செய்வதற்கு கருதுவதாக அறிவித்துள்ளது.இத்தகவல் சில பெற்றோர்களிற்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு செய்வதால் அடுத்த வருடம் 3.5மில்லியன் டொலர்கள் வரை சேமிக்கலாம் என கல்கரி கல்வி சபை தெரிவிக்கின்றது. அது மட்டுமன்றி ஒவ்வொரு ஷிப்டிற்கும் பாடசாலை பேரூந்து சாரதிகள் பல பயணங்களை செய்ய முடிவதால் மேலதிகமாக 2மில்லியன் டொலர்கள் சேமிப்பாகும்.

இம்மாற்றத்தினால் சில பெற்றோர்கள் சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பெற்றோர்கள் தங்கள் வேலை நேரத்தை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். வெள்ளிக்கிழமை பிற்பகல்களின் பிள்ளைகள் பராமரிப்பிற்கு மேலதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha