இலங்கை செய்திகள்

காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 பேர் காயம்

19 May 2017

காலி – அக்குரஸ்ஸை பிரதான வீதியின் கியன்துவ பிரதேசத்தில் இன்று (19) காலை இடம் பெற்ற வாகன விபத்தில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் அறுவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha