இந்தியா செய்திகள்

காஷ்மீரில் இளைஞரைச் சுட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

20 Apr 2017

 ஶ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், அவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 இதில், போராட்டக்காரர்கள் சிலர் உயிரிழந்தனர். இதனால், காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், ராணுவம் மீது கற்களை வீசியதாகக் கூறி, அகில்வானி என்பவர் மீது கடந்த 9-ம் தேதி, இந்தோ திபெத் எல்லைக் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அகில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவர் அன்றைய தினம் தனது தாய்க்கு மருந்து வாங்கச் சென்றார் என்றும், அவரை ராணுவம் தவறாகச் சுட்டுவிட்டனர் என்றும் அகிலின் உறவினர் கூறியுள்ளார். இதுகுறித்து, பீர்வா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இந்தோ-திபெத் எல்லை போலீஸ் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது.

குறிப்பாக, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகிலின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha