இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று பிணையில் விடுதலை

19 May 2017

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கொழும்பில் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிணையில் விடுதலை செய்துள்ளது.

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பிக்கு மாணவர் ஒருவர் உட்பட 8 மாணவர்கள் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வீதிகளில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்ததுடன், அதனை கலைப்பதற்கு பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha