இந்தியா செய்திகள்

சர்வதேச கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்

18 May 2017

இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்ற தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், சர்வதேச கோர்ட்டின் அதிகார வரம்பு எங்களை கட்டுப்படுத்தாது. சர்வதேச கோர்ட் தீர்ப்பு ஜாதவ் வழக்கின் தன்மையை மாற்றவில்லை. ஜாதவுக்கு எதிரான போதுமான ஆதாரங்கள் உள்ளன. இதனை சர்வதேச கோர்ட்டில் சமர்ப்பிப்போம். இந்தியா, தனது உண்மையான முகத்தை மறைக்கிறது. அந்நாட்டை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha