சினிமா செய்திகள்

சிம்பு ரசிகராக மாறிய இசையமைப்பாளர்

19 May 2017

  ஜி. வி. பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லான்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது சிம்புவை வைத்து அன்பாவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு நான்கு கெட்டப்பில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.   மூன்று கெட்டப்புக்கு தனித்தனியே மூன்று டிரைலர் விடவும் முடிவு செய்தனர்.

அதன்படி இரண்டு கெட்டப்புக்கு டிரைலர் ரீலிஸாகிவிட்டது. மேலும் நான்கு கெட்டப் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   இதைத்தொடர்ந்து படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன்பிறகு படத்தை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மேலும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.   அதாவது இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். அதுவும் சிம்புவின் ரசிகராக நடிக்ககிறாராம்.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாக உள்ளது.

 

.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha