உலகம் செய்திகள்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணையலாம்!

19 Apr 2017

சிரியாவில் அதிபர் அசாதுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அண்மையில் சிரியாவில் ரசாயன தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா சிரியா மீது வான் வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து இணையலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில்,' சிரியாவில் அசாத்தின் ஆட்சி அரக்கத்தனமானது. இதற்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தேவைப்பட்டால் இங்கிலாந்தும் இணையும்' என அவர் கூறியுள்ளார். மேலும் 'ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷ்யா தனது 'குருட்டுத்தனமான ஆதரவை' சிரியாவுக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha