சினிமா செய்திகள்

சிவகுமார் அறக்கட்டளைக்கு சிக்கல்

17 May 2017

சிவகுமார் நடித்த 100வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. இந்தப் படத்தின் 100வது நாள் விழாவின்போது தனது பெயரில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை துவக்கினார். 1979ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 37 ஆண்டுகளாக ஆண்டுதோறும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சேவையை சூர்யா தொடங்கி உள்ள அகரம் அறக்கட்டளை மாநில அளவிலான மாணவர்கள் மட்டுமல்லாது பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாமல் மேற்படிப்பு படிக்க முடியாதவர்களுக்கும் ஆண்டு தோறும் உதவி செய்து வருகிறார்கள்

இந்த ஆண்டு கல்வி உதவிக்கான மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ரேங்கிங் வழங்கப்படாமல் கிரேட் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனால் மாநில அளவில் முதல் மாணவர், இரண்டாவது மாணவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. அதோடு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை விளம்பரப்படுத்துவதோ, பெருமைப்படுத்துவதோ கூடாது என்றும் தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு ரேங்க அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதவிபெற தகுதியான மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையும், அகரம் பவுண்டேசனும் மிகத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத மாணவர்களை விண்ணப்பிக்க சொல்லி அதிலிருந்து மாணவர்களை தேர்வு செய்து உதவி செய்யலாமா என்று யோசித்து வருகிறார்கள். பார்வையற்ற மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்குவதில் சிக்கல் இருக்காது. இது தொடர்பாக தீவிரமாக யோசித்து வருகிறார்கள்.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha