சினிமா செய்திகள்

சீதா வேடத்தில் நடிக்க விரும்பும் ஆலியா பட்

19 May 2017

பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவர், அமிஷ் திரிபாதி எழுதியுள்ள சீதா - வாரியர் ஆப் மிதிலா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆலியா பட், தனக்கு சீதா வேடத்தில் நடிக்க ஆசை என்றார்.

இதுகுறித்து ஆலியா பட் மேலும் கூறியிருப்பதாவது... "இந்த புத்தகத்தை யாராவது படமாக இயக்கினால், அதில் நான் சீதா வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். சீதாவை பற்றி அறிந்திராத பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய புராணங்களில் ராமாயணம் முக்கியமானது. அப்படிப்பட்ட ராமாயணத்தை மக்கள் திரையில் கண்டால் நிச்சயம் ரசிப்பார்கள். சீதா ஒரு நல்ல அரசியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார்" என்றார்.

ஆலியா பட் அடுத்தப்படியாக ரன்பீர் கபூர் நடிக்க உள்ள டிராகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha