இந்தியா செய்திகள்

செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் மோடி

20 Apr 2017

அமெரிக்காவில் இருந்த வெளிவரும் முன்னணி பத்திரிகையான ‛‛டைம்'' 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் செல்வாக்குமிக்கவர்களின் 100 பேரை தேர்வு செய்து வெளியிட்டது.

இதில் பிரதமர் மோடி, இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் பேடிம் நிறுவனத்தின் விஜய் ஷேகர் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தியது மற்றும் டிஜிட்டல் இந்தியா தொழில்நுட்பத்தினை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடி மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பே.டி.எம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா ஆகியோர் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ், போப் பிரான்சிஸ், கால்பந்து வீரர் நெய்மர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha