இலங்கை செய்திகள்

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்வுகளை ஏற்க முடியாது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

21 Apr 2017

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள தீர்வில் உடன்பட முடியாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நவீன் டி சொய்ஷா இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் சைட்டத்துக்கு எதிரான சுமார் 100 தொழிற்சங்கங்கள் கூடி கலந்துரையாடியதாகவும், இதன்போது ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு உடன்பட  முடியாது என சகல தொழிற்சங்கங்களும் உடன்பட்டதாகவும் டாக்டர் நவீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சைட்டமுக்கான வேறு ஒரு நிறுவாக சபையொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனையின் மூலம், தற்போது அந்நிறுவனத்திலுள்ள நிருவாக சபை தவறானது என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதையெ காட்டுவதாகவும் டாக்டர் நவீன் மேலும் கூறியுள்ளார்.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச்சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதகவும், சைட்டம் நிறுவனத்தை தனியார் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாற்றி, அதனை  அரச கட்டுப்பாட்டு சபையாக மாற்ற தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி சைட்டத்துக்கான அரசாங்கத்தின் தீர்வாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha