இலங்கை செய்திகள்

ஜனாதிபதி சொன்னால் அமைச்சில் இருந்து வெளியேறத் தயார் - அர்ஜுன

21 Apr 2017

ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், தான் செல்லத் தயார் எனவும், அங்கும் இங்கும் உள்ளவர்கள் கூறும் விதமாக செல்வதற்கும் வருவதற்கும் நான் ஒன்றும் வெருளியல்ல என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நாம் இந்த அரசாங்கத்தை பெரும் எதிர்பார்ப்புடன் அமைத்தோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் நானும் இன்னும் மனவேதனையுடன் தான் உள்ளேன்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில்,துறைமுகத்தில் திருடிய பெரும்பாலான திருடர்கள் இன்று துறைமுகம் தொடர்பில் சீன அமைப்புடன் மேற்கொள்ளும் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டுள்ளனதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha