இந்தியா செய்திகள்

ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாக். மனு

19 May 2017

குல்பூசண் ஜாதவ் வழக்கில் மறு விசாரணை கோரி சர்வதேச கோர்ட்டில் பாக்.மனு செய்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும், இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 2016, மார்ச்சில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து அந்நாட்டு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ள, ஐ.நா.,வின் சர்வதேச கோர்ட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா மே, 9ல் வழக்கு தொடர்ந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மே, 10ல், சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பாக வாதங்கள் நடந்தன. , 11 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட் அமர்வு, இந்த வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.வியன்னா ஒப்பந்தத்தின் படி,சிறையில் உள்ள கைதியை சந்திக்க,அனுமதிக்க வேண்டும். ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண் டும். கோர்ட், தன் உத்தரவில் கூறியுள்ளது. சர்வதேச கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்தும், மறு விசாரணை கோரியும், பாக். புதிய மனுவை சர்வதேச கோர்ட்டில் தாக்கல் செய்தது. அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாம் என பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha