தொழில்நுட்பம் செய்திகள்

ஜிமெயில் கணக்கை என்க்ரிப்ட் செய்வது எப்படி?

23 Apr 2017

கூகுளின் மின்னஞ்சல் சேவை பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் அதனை என்க்ரிப்ட் செய்வது மிகவும் அவசியமானது.     தற்போது பெரும்பாலான செயலிகளில் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிமெயிலிலும் என்க்ரிப்ஷன் செய்ய முடியும். 

  என்க்ரிப்ஷன் வழிமுறைகள்:

  ஃபயர்பாக்ஸ் பிரவுசர் வாடிக்கையாளர்கள்:

  # இண்டர்நெட் சேவையை பயன்படுத்த ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி add-ons on Firefox சேவையை பயன்படுத்தலாம். 

  # இந்த சேவையில் கிடைக்கும் Encrypted Communications Extension-யை ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

  # பின்னர் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை க்ளோஸ் செய்து மீண்டும் ஓபன் செய்ய வேண்டும். 

  # பிறகு ஜிமெயில் சென்று மின்னஞ்சலை கம்போஸ் செய்து, ரைட்-கிளிக் செய்தால் Encrypt Communication ஆப்ஷனை பார்க்க முடியும்.

  # அதில் பாஸ்வேர்டு பதிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்தால் ஜிமெயில் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும். 

  கூகுள் க்ரோம் வாடிக்கையாளர்கள்:

  # கூகுள் க்ரோம் பயன்படுத்துபவர்கள் Safe Gmail பயன்படுத்தலாம். 

  # முதலில் குரோம் பிரவுசரில்  Safe Gmail இன்ஸ்டால் செய்து பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். 

  # பின்னர், ஃபயர்பாக்ஸ் பிரவுசரை போன்றே ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பலாம். 

  இவை இரண்டிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சலை டீக்ரிப்ட் செய்ய எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha