உலகம் செய்திகள்

ட்ரம்ப் - இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி சந்திப்பு!

21 Apr 2017

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இத்தாலி நாட்டு பிரதமர் பாலா ஜென்டிலோனியை (Paolo Gentiloni) வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பின்னர், இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அப்போது ட்ரம்ப், 'ஆப்கான் போருக்கும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் இத்தாலியின் ராணுவப் பங்கு மிகப்பெரியது. அமெரிக்கா மற்றும் இத்தாலி இணைந்து பெரிய அளவிலான மக்கள் இடப்பெயர்வு மற்றும் சர்வதேச கடத்தல் ஆகிய பிரச்னைகளுக்கு வழி காணலாம்' என்று கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் நடந்து கொண்டிருக்கும் போது தான், பிரான்ஸில் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் பற்றிய செய்தியும் வெளிவரத் தொடங்கின. இது குறித்து ட்ரம்ப், 'அமெரிக்க தரப்பில் பிரான்ஸில் நடந்த தாக்குதலுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இன்னொரு தீவிரவாத தாக்குதல் போலத்தான் தெரிகிறது' என்று கூறினார். ஆனால், இதுவரை பிரான்ஸ் அரசு இந்த தாக்குதல் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha