உலகம் செய்திகள்

திபெத்திற்கு சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்க கோரிக்கை

09 May 2017

சீனர்களுக்கு அமெரிக்காவில் தடைகள் இல்லாமல் இருக்கையில் சீனாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு தடைகள் இருக்கின்றன. இது ஒப்புக்கொள்ள முடியாதது என்றார் ஜிம் மெகவர்ன் எனும் எம்.பி.

“அமெரிக்காவில் சீனர்கள் சுதந்திரமாக பயணிக்க வேண்டுமென்றால் அமெரிக்கர்களும் சீனாவில் (திபெத் உட்பட) சுதந்திரமாக பயணிக்க முடிய வேண்டும்” என்றார் ஜிம். இது தொடர்பாக மற்றொரு எம்.பியுடன் இணைந்து அவர் சட்டத் திருத்த மசோதா ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். ”திபெத்தியர்கள் சீனக் குடிமக்கள் என்றால் இதர சீனர்கள் போல் அவர்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும்” என்றார் அவர். அதேபோல தலாய் லாமா திபெத் திரும்ப விரும்பினால் அதற்கு சீனா சம்மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திபெத் விஷயங்களை கையாள்வதற்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்றும் கோரினார் ஜிம். சீன அதிகாரிகளுக்கான கட்டுப்பாட்டை ஒரு பட்டியல் தயாரித்து தொடர்புடைய சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர். புதிய டிரம்ப் அரசு தலாய் லாமாவுடன் வெளிப்படையாக பேச வேண்டும் என்றார் அவர். திபெத் விஷயத்தில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சீனா நிஜ ஆயுதங்களுடன் போர்ப்பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது. தென் கொரியாவிற்கு அருகில் நடைபெற்ற இந்த ராணுவ ஒத்திகையை தேசப் பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதாக செய்தி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் தாட் ஏவுகணையை சீனாவிற்கு அருகில் அமைக்கும் முடிவினால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடே இந்த பயிற்சியும், சோதனைகளும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha