இந்தியா செய்திகள்

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்?! ஸ்டாலின் மறுப்பு

15 Feb 2017

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்?!

ஸ்டாலின் மறுப்பு

தமிழகத்தில் நடந்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று(15/02/2017) காலை 11 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியுள்ளது. வழக்கமாக இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்தான் நேரடியாக தொலை பேசியின் மூலம் அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் ,இந்த முறை அப்படி நடக்கவில்லை.

 நேற்று இரவு ஸ்டாலின் செல்போனிலிருந்து, கூட்டத்திற்கு அழைக்கும் அவசர எஸ்.எம்.எஸ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வந்திருக்கிறது. இதனால்தான், திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

எனவே, உடனே அவர்கள் திமுக செயல் தலைவரான ஸ்டாலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்திருக்கிறது. சிலருக்கு தொடர்பு கிடைத்த போதும் ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை.

இந்தநிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தோடு சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த அவசர கூட்டம் தொடர்பான குழப்பத்திற்கு காரணம், பாஜக மற்றும் .பி.எஸ் தரப்பு என்று கூறப்படுகிறது. அதாவது பாஜகவும் ஓ.பி.எஸ் அணியும் இணைந்து திமுக எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் ஸ்டாலின் தரப்பிற்கு கிடைத்திருக்கிறது.

இதனால் ஸ்டாலின் உடனே எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த எம்.எல்.ஏ.,க்கள், “ நாங்கள் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் நம் கட்சிக்கு வரும் பட்சத்தில் நாமே ஆட்சியமைக்கலாம்என்று கூறிவருகிறார்களாம்.

ஆனால்அவர்களுக்கு சட்டம் தெரியாமல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவில் இருந்து மொத்தமாக 90 எம்.எல்.ஏ.,க்கள் வந்தால்தான் அவர்கள் பதவி தப்பிக்கும். அதைவிட குறைந்த எண்ணிக்கையில் வரும் பட்சத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுடைய எம்.எல்.ஏ., பதவி பறிபோய்விடும். இதை புரிந்து வைத்திருக்கும் ஸ்டாலின் அதை மறுத்திருக்கிறார்.

மேலும், அதிமுக தலைமைக்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுகவினர் ஆதரவோடு ஆட்சியமைத்தால் அது திமுகவிற்குப் பாதகமாக அமையும் என்று இந்த யோசனையை வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியதாகவும் தெரிகிறது. ஓ.பி.எஸ்ஸுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நாம் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்று ஸ்டாலின் தரப்பு நம்புகிறது. மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் ஆலோசிக்கத்தான் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெறுகிறது என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கவிருப்பதாக வெளியான தகவலை திமுக செயல்தலைவர் மு..ஸ்டாலின் கோவையில் செய்தியாளர்களிடம் மறுத்துள்ளார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்