கனடா செய்திகள்

தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பெண்ணொருவர் பலியானார்

16 May 2017

கனடாவில் இளம்பெண் ஒருவரை 30 தெரு நாய்கள் கூட்டமாக கடித்து குதறியதில் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மனிடோபா மாகாணத்தில் உள்ள Little Grand Rapids நகரில் Donnelly Rose Eaglestick (24) என்பவர் தனது 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அந்நகரில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் சில கூட்டமாக சேர்ந்து அப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளது.

சில மணி நேரத்திற்கு பின்னர், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பொலிசார் வந்தபோது உடல் சிதைந்த நிலையில் கிடந்த இடத்தை சுற்றி சுமார் 30 தெரு நாய்கள் கூட்டமாக இருந்துள்ளன.

பொலிசாரை கண்டு ஒரு நாய் ஆவேசமாக பாய்ந்ததால் அதனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பெண்ணின் சடலத்தை கைப்பற்றியபோது நாய்கள் கடித்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

சடலத்தை நேரில் பார்த்த தோழி ஒருவர் பேசியபோது ‘அதிகாலை நேரத்தில் நாய்கள் அதிகளவில் சத்தம் எழுப்பிய போது சந்தேகம் ஏற்பட்டது. தற்போது தெரு நாய்களுக்கு தாய் ஒருவர் பலியாகியுள்ளது வேதனையாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தெரு நாய்கள் மூலம் மற்றொரு ஆபத்து நிகழாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha