தொழில்நுட்பம் செய்திகள்

நடமாடும் ‘வை பை’ நிலையம் புதிய இணைய வசதி அறிமுகம்

23 Apr 2017

பொது இடங்­களில், ‘வை பை’ தொழில்­நுட்­பம் மூலம், இணைய வச­தியை வழங்­கும், ‘பப்­ளிக் டேட்டா ஆபிஸ்’ என்ற சாத­னத்தை, மத்­திய அர­சின், சி – டாட் நிறு­வ­னம் உரு­வாக்கி உள்­ளது.இந்த சாத­னத்தை, மத்­திய தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, டில்­லி­யில் அறி­மு­கப்­ப­டுத்தி பேசி­ய­தா­வது:குக்­கி­ரா­மங்­க­ளி­லும் இணைய வசதி கிடைக்க வேண்­டும் என, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அதற்கு, இந்த பப்­ளிக் சர்­வீஸ் டேட்டா சாத­னம் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கும்.ஒரு காலத்­தில், பொது தொலை­பேசி கூண்­டு­கள் இருந்­தது போல, இந்த சாத­னத்தை ஆங்­காங்கே நிறுவி, இணைய சேவை வழங்­க­லாம். மாட்டு வண்­டி­யில் கூட, இந்த சாத­னத்தை பொருத்தி, கிரா­மங்­களில் இணைய வசதி அளிக்­க­லாம்.ஒரே நேரத்­தில், 100 மொபைல் போன்­க­ளுக்கு, ‘2ஜி, 3ஜி அல்­லது 4ஜி’ தொழில்­நுட்­பத்­தில், 500 மீ., சுற்­ற­ள­வில், இணைய வச­தியை இந்த சாத­னம் வழங்­கும்.இந்த சேவையை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கூப்­பன்­களை பெற்று, பொது இடங்­களில், ‘லேப் – டாப், மொபைல் போன்’ போன்­ற­வற்­றின் மூலம், இணை­யத்தை பயன்­ப­டுத்­த­லாம். மொத்­தத்­தில், பொது தொலை­பேசி போல, பப்­ளிக் டேட்டா ஆபிஸ் செயல்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha