சினிமா செய்திகள்

நடிகையின் ஆசையை நிறைவேற்றிய சித்தார்த்

18 May 2017

  டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து  வைத்தார். அதன்பிறகு, நாகர்ஜுனாவின் குடும்பப் படமான ‘மனம்’ தெலுங்குப் படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்தார்.

அதுவே  ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது போல. அடுத்தடுத்து பல தெலுங்குப் பட வாய்ப்புகள் கொட்ட, இப்போது ஆந்திராவிலேயே  செட்டிலாகிவிட்டார் ராஷி கண்ணா.   தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது அவருக்கு.

அதை  சித்தார்த்திடம் சொல்ல, தான் நடிக்கும் ‘சைத்தான் கி பச்சா’ படத்தில் ஹீரோயினாக்கி விட்டார்.

மேலும், நயன்தாரா, அதர்வா  நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha