தொழில்நுட்பம் செய்திகள்

பூமியின் புதிய புகைப்படம்...!

23 Apr 2017

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி 'உலக பூமி தினம்' கொண்டாடப்படுகிறது. 1970-ம் ஆண்டு முதல் இந்த 'உலக பூமி தினம்' அறிவிக்கப்பட்டு உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1970-ல் நடைபெற்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலைக் காப்பது பற்றி பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை சர்வதேச அளவில் பல்வேறு அரசுகள் மற்றும் ஆர்வலர்கள் இந்த தினத்தில் ஒருங்கிணைப்பது வழக்கம்.

இதையொட்டி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனத்தால் விண்வெளிக்க அனுப்பப்பட்ட ராக்கெட் மூலம் எடுக்கப்பட்டு புகைப்படத்தை தான் தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளிவந்த பூமியின் புகைப்படங்களில் இருந்து முழுவதும் மாறுபட்டு இருப்பதால், சமூக வலைதளங்களிலும் இது வைரலாக ஷேராகி வருகிறது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha