இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வு

19 Apr 2017

இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கெதிராகவும், நாட்டைவிட்டு இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (19.04.2017) மட்டக்களப்பு நாவலடியிலுள்ள நினைவுத் தூபி அருகில் அனுஷ்டிக்கப்பட்டது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரகளான பொன.செல்வராசா, பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர் மா.நடராசா மற்றும் அதரவாளரகள் கலந்துகொண்டனர். 
அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் விஷேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், அன்னை பூபதியின் உறவினர்கள், நண்பர்கள், மட்டக்களப்பு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம் பெற்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha