தொழில்நுட்பம் செய்திகள்

மனநலத்தில் சமூக வலைதளங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ஆய்வில் தகவல்

19 May 2017

யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூகவலைத்தளங்கள் தங்களுடைய ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்ற தலைப்பில் பல கேள்விகளை இந்த இணையக் கருத்து கணிப்பில் கேட்கபட்டது.14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் இந்த் கருத்து கணிப்பு நடைபெற்றது.

கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.

இந்த தரவரிசைகளின் அடிப்படையில், மனநலத்தில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகம், யூடியூப் என்றும் அதற்கு அடுத்தபடியில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவை இருந்தன என்று தெரியவந்துள்ளது.

 

ஒட்டுமொத்த மதீப்பிட்டில், ஸ்னாப்சேட் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிக்கு மிகுந்த குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.

ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை சரிப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்தவேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரத்திற்கு சமூகவலைத்தளங்களை பயன்படுத்தினால், பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கை செய்ய ஒரு பாப்-அப் அறிவிப்பு தோன்று செய்வது. ( இதற்கு கருத்து கணிப்பில் பங்கேற்ற இளைஞர்களில் 70 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்தனர்).

டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் மாற்றப்பட்ட புகைப்படங்களை சுட்டிக்காட்டுவது. உதாரணமாக, ஃபேஷன் பிராண்டுகள், பிரபலங்கள் மற்றும் பிற விளம்பர நிறுவனங்கள் , இது போன்ற டிஜிடல் தொழில் நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்களில் , ஒரு குறியீடை பதிவு செய்ய அனுமதிக்கலாம்.

மனநல பாதிப்பு உள்ளவர்களை சமூகஊடகங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவியை பற்றிய தகவல்களை மறைமுகமாக அளிப்பது. என்பது உள்பட பல எடுக்கபட நடவடிக்கைகள் குறித்து சுட்டி காட்டபட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha