சினிமா செய்திகள்

மலையாள டீச்சருக்கு ஜோடியான தெலுங்கு நடிகர்

19 May 2017

ஜெயம் ரவி, சாயீஷா நடிப்பில், விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய், தன்னுடைய அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிவிட்டார்.

இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் பணிகளில் இருக்கும் விஜய், ‘வனமகன்’ ரிலீஸ் ஆனதும் ஷூட்டிங் கிளம்புகிறாராம். லைக்கா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ‘கரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தமிழில் மட்டுமே தயாராவதாக சொல்லப்பட்ட இந்தப் படம், தற்போது தெலுங்கிலும் சேர்த்து தயாராகிறதாம். அதற்கேற்ப, தெலுங்கு நடிகரான நாக செளர்யா, சாய் பல்லவிக்கு ஜோடியாகிறார்.

இருவருக்குமே இதுதான் முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha