இலங்கை செய்திகள்

மீண்டும் பணிப்பகிஸ்கரிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் ஈடுபடத் தீர்மானம்

19 May 2017

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன்.டி சொய்சா இதனைத் தெரிவித்தார்.

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் கையாண்ட வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் பராமுகம் என்பவற்றை இனி மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என கூறினார்.

தற்போது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்துக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவை அனைத்தையும் அரசாங்கம் கண்ணீர்ப்புகைக் குண்டு கொண்டும் அடாவடித்தனத்தைக் காட்டியும் அடக்க முயல்வதாகத் தெரிவித்துள்ள அவர் இது மிகவும் கொடூரமானத் தாக்குதல் எனவும் கூறினார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha