இலங்கை செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு மஹிந்தவும், கோட்டாவுமே பொறுப்புக் கூறவேண்டும் - விஜித

21 Apr 2017

மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்திற்கு மஹிந்தவும், கோட்டவுமே காரணம் எனவே, அந்த அனர்த்தத்திற்கும், ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்திழப்புக்களுக்கு அவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என்றும், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்தும், அந்த பிரச்சினையின் பாராதூரம் குறித்து அரசாங்கம் அக்கறைக் கொள்ளாது இருக்கின்றது.

இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் காணாது,  அவ்வப்போது தற்காலிக தீர்வுகளைக் கண்டு வந்தமையே இந்த அனர்த்தம் ஏற்பட பிரதான காரணமாகும்.

கடந்த ஆட்சியில்,  புளுமெண்டல் குப்பைகளை குறித்த பகுதியில் கொட்டும் போதே மக்கள் விழித்துக் கொண்டார்கள். அவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்கள்.

எனினும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதனைக் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவர் பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி,  2008ஆம் ஆண்டில் குப்பைகளை பலவந்தமாக அங்கு கொட்டினார்.

இதன் பின்னணியில் என்ன நடக்கிறது. பெரிய மாபியா கும்பலே இதன் பின்னணியிலிருந்து செயற்படுகின்றது. இங்குள்ள குப்பைகளை அகற்ற 180 தனியார் நிறுவனங்கள் அப்போதே முன்வந்ததுடன், அதில் கிடைக்கும் இலாபத்தில் அரசுக்கும் ஒரு பங்கு தருவதாக தெரிவித்தன.

இதற்கு அப்போதிருந்த மஹிந்த அரசு இணங்கியிருந்தால், இன்று எதுவும் நடந்திருக்காது. இதற்கான முழு பொறுப்பினையும் மஹிந்த ராஜபக்ஷ தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராஜபக்சக்கள் சேர்த்து வைத்த குப்பைகள் தான் இன்று மீதொட்டமுல்லையில் மலையாக உருவெடுத்திருக்கிறது.’ என்றும் கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha