தொழில்நுட்பம் செய்திகள்

முகநூல் பதிவுகளில் கட்டுப்பாடு ! மார்க்

05 May 2017

உலகம் முழுவதும் ஏறக்குறைய 200 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கும் சமூக வலைதளமாக முகநூல் திகழ்கிறது. தகவல் பரிமாற்றங்கள்,  சொந்த கருத்துகளை கட்டுப்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் முகநூல் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர். மாறிவரும் காலநிலைக்கு ஏற்றபடி தரவுகளை (அப்டேட்) முகநூல் வழங்கி வருகிறது.

 சாமி கும்பிடுவது, ஆற்றில் நீந்துவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று அவரவர் மகிழ்ச்சியை செல்போனில் படம்பிடிப்பது இயல்புதான். ஆனால், அதையே "லைவ்-வீடியோ" வாக உலகம் முழுவதும் பார்க்கும் வகையில்  பதிவேற்றம் செய்யவும் வழிகொடுத்திருப்பது முகநூல்தான்.

 நல்ல விஷயத்தில் கெட்டதும் கலப்பது போல  "லைவ்-வீடியோ"  பதிவில் கொலை, தற்கொலை போன்றவற்றையும் பதிவேற்றம் செய்கிற போக்கும் அதிகரித்து வருவது முகநூலின் மதிப்பை குறைப்பது போல் ஆகிவிட்டது. இதுகுறித்த புகார்கள் முகநூலின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்  கவனத்துக்கு சென்றுள்ளது.

 "வருங்காலங்களில் இப்படிப்பட்ட பதிவேற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் அவைகளை முகநூலில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள மட்டுமே மூன்றாயிரம் பணியாளர்கள், திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு  நியமிக்கப் படவுள்ளனர்"  என்று மார்க் சக்கர்பெர்க்  அறிவித்துள்ளார்...

 முகநூலில் இனி நல்ல முகங்களை, நல்ல தகவல்களை மட்டுமே பதியலாம், பார்க்கலாம் என்பது எத்தனை நல்ல விஷயம்... !

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha