இலங்கை செய்திகள்

முடியுமானால் அலரிமாளிகையை முற்றுகையிட்டு காண்பியுங்கள் என கயந்த கருணாதிலக்க சவால்

21 Apr 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். இம்முறை மே தின கூட்டம் தேர்தலுக்கான பலப்பரீட்சையாகும். எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம். கூட்டு எதிரணியினர் அலரி மாளிகையை முற்றுகையிடுவதாக கூறியுள்ளனர்.

முடியுமானால் அலரிமாளிகையை முற்றுகையிட்டு காண்பியுங்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க சவால் விடுத்தார்.போயா தினமல்ல எந்த தினத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. இதுபோன்ற எத்தனையோ வார்த்தைகளை நாம் அரசியல் வாழ்க்கையில் கேட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha