இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நான்கிற்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

19 May 2017

யாழ்ப்பாண சாவகச்சேரி –  நுணாவில் – ஏ 9 வீதியில்  நான்கிற்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று  (18) பிற்பகல் 3.15 அளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனகம்புளியடி – நுணாவில் பகுதியில் இராணுவ வாகனம் மற்றும்  சிறிய பேருந்து, பட்டா ரக வாகனம், கார், மோட்டார் சைக்கிள்  ஆகியன மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில், பட்டா ரக வானகத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha