இந்தியா செய்திகள்

ரகசிய வாக்கெடுப்புக்கு ஸ்டாலின் ஆதரவு

17 Feb 2017

நாளை சட்டசபையில் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு செய்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் ரகசிய வாக்கெடுப்பு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். 

  நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சட்டமன்றம் சிறப்பு கூட்டம் கூடுகிறது. 

இதில் திமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. திமுக எம். எல். ஏ. க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது.   காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.   ஓ. பி. எஸ். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆனால் அது சபாநாயகர் கையில் உள்ளது. ஒருவேளை ரகசிய வாக்கெடுப்பு நடந்தால், அதிசயம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்