கனடா செய்திகள்

ரொரன்ரோ பகுதி வீடு ஒன்றில் தீப் பரவல்

17 May 2017

ரொரன்ரோ Bathurst Street மற்றும் Lawrence Avenue பகுதியில், Marmion Avenueவில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீப்பரல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் படையினர் தீ பரவிய அந்த இரண்டு மாடி வீட்டினுள் இருந்த நான்கு பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்துடன் தீயணைக்கும் நடவடிக்கையிலும் துரிதமாக செயற்பட்டு அதிகாலை 2.40 அளவில் தீப்பரவலைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் தொடர்ந்தும் சம்பவ இடத்தில் சிறு தீப் பரவல்களை முற்றாக அணைக்கும் நடவடிக்கைகளில் புதன்கிழமை காலையிலும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இத் தீப்பரவலால் ஏற்பட்ட சேதம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha