கனடா செய்திகள்

ரொறொன்ரோ ஐலன்ட் பூங்கா மூடப்பட்டது

18 May 2017

ரொறொன்ரோ ஐலன்ட் பூங்கா மற்றும் அங்குள்ள மூன்று கடற்கரை உள்ளிட்ட பகுதிகள், மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என ரொறொன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன மழை காரணமாக ரொரன்ரோ ஐலன்டின் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் நீர்மட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரையிலான ரொறொன்ரோ ஐலன்ட் பூங்காவுக்கான நுழைவு  அனுமதிகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படுவதாகவும், குறித்த திகதி வரையில் அது மூடப்பட்டே இருக்கும் எனவும் ரொறொன்ரோ நகர நிர்வாகம் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ நகர நிர்வாகம் அங்குள்ள நீர்மட்ட அதிகரிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது என்றும், நீர் மட்டம் குறைவடைந்து பாதுகாப்பான நிலை ஏற்பட்டதும் பூங்காவை முடிந்த வரையில் விரைவாக திறப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha