கனடா செய்திகள்

ரொறொன்ரோ லெட்ஸ்பரி பார்க் பகுதியில் வீடு ஒன்றில் தீ விபத்து

18 May 2017

ரொறொன்ரோ லெட்ஸ்பரி பார்க் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாத்ரூஸ்ட் தெரு மற்றும் லாரன்ஸ் அவென்யூ பகுதியில், மர்மியோனில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த தீப்பரல் நேற்று புதன்கிழமை ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடுமையான போராட்டத்தின் பின் தீயினைக்கட்டுக்குள்ள கொண்டுவந்தனர்.

ஆனால், இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிரவிசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha