கனடா செய்திகள்

றோனா அம்ப்றோஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதாக அறிவிப்பு

16 May 2017

பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவர் றோனா அம்ப்றோஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.

ஒட்டாவாவில்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியில் இந்தனை காலமாக மக்களுடன் இணைந்து பணியாற்றியதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும், இந்த கோடைகால நாடாளுமன்ற ஆரம்பத்துடன் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுளளார்.

றோனா அம்ப்றோஸ் நீண்டகாலமாகவே அல்பேர்ட்டா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்கு பின்னர் பழமைவாதக் கட்சித் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் பதவி விலகியதை அடுத்து இடைக்காலத் தலைவராகவும் றோனா அம்ப்றோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பழமைவாதக் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர் எதிர்வரும் 27ஆம் நாள் அறிவிக்கப்படவுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலைமையிலேயே றோனா அம்ப்றோஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha