உலகம் செய்திகள்

வடகொரியாவை அழிக்க மெகா குண்டு தயார் செய்த அமெரிக்கா

21 Apr 2017

வடகொரியாவின் மூத்த தலைவரான இரண்டாம் கிம் சங்க்கின் 150 வது பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. . இது குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், நிகழ்ச்சி ஒன்றின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில், வடகொரியா வீசும் குண்டு அமெரிக்க நகரை தாக்குவது போன்றும், அந்த வீடியோவின் முடிவில் அமெரிக்க தேசியகொடி எரிவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க இராணுவத்தினர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்த பகுதியை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்கா அன்னை வெடிகுண்டு என்று அழைக்கப்படும் மோப் என்ற வெடிகுண்டை பயன்படுத்தியது.

இராணுவவீரர்களின் செயல்பாடுகளைக் கண்டு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அவர்களை பாராட்டினார். இந்த ஆயுதத்தை அமெரிக்கா முதல் முறையாக பயன்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா ஒரு ரகசிய வெடிகுண்டு ஒன்றை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வெடிகுண்டு வடகொரியாவின் அணுசக்தி தொழிற்சாலைகளை அழிப்பதற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது சுமார் 14,000 கிலோ எடை கொண்டது எனவும், அமெரிக்காவின் ஒரு துறைமுகம் ஒன்றில் ரகசியமாக தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் சக்தியை வெளிப்படுத்தி வெடிக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha