கனடா செய்திகள்

வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 4 பேர் பலி

16 May 2017

லொறி மோதிய வேகத்தில் தீப்பிடித்து வேகமாக எரிந்ததால் அதில் பயணித்த 4 பேர் வெளியேற முடியாமல் காருக்குள் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து நிகழ்ந்த சில வினாடிகளில் அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த பொலிசார் லொறி ஓட்டுனரான Dunhill Tabanao என்ற 37 வயதான நபரை கைது செய்தனர்.எனினும், உயிரிழந்த 4 வாலிபர்கள் குறித்து பொலிசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் லொறி ஓட்டுனர் மீது தவறு இருந்தது தெரியவந்துள்ளதால் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha