தொழில்நுட்பம் செய்திகள்

வாட்ஸ் அப் வந்த கதை தெரியுமா ?

04 May 2017

இன்று அதிகாலை முதல் வாட்ஸ் அப் சேவை துண்டிக்கப் பட்டிருக்கிறது... வாட்ஸ் அப் பை இத்தனை நாளாய் நம்முடைய விருப்பம் போல் பயன்படுத்தி வந்தோம்... வாட்ஸ் அப் இல்லாமல் இருக்கும் இந்த கொஞ்ச நேரத்திலாவது வாட்ஸ் அப் பின் அருமை, பெருமையைப் பற்றிப் பேசலாமே...

சராசரியாக மாதம் ஒன்றிற்கு 450 மில்லியன் பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் சேவையை தினமும் 15 லட்சம் பேர் புதிதாகப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை கட்டணமே இல்லாமல் (நெட் இருக்கணும் மக்களே!) கும்ப்லிங், கும்ப்லிங் ஆக அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் உண்டு என்பதால் வாட்ஸ் அப் பெருமை எங்கேயோ பறந்தது. நேற்றுவந்த தம்பியான 'வாட்ஸ் அப்' பின் வேகமான வளர்ச்சியைப் பார்த்த அண்ணன் பேஸ்புக், தம்பி 'வாட்ஸ் அப்' பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டால்தான் நம் வியாபாரம் ஓடும் என்று தம்பிக்கு ஒரு விலை வைத்தார்...

தம்பியும் சம்மதிக்க, 99,584 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது வாட்ஸ் அப். உக்ரைனிலிருந்து கையில் ஒன்றுமே இல்லாமல் பிழைப்பு தேடி அமெரிக்காவுக்கு வந்த இளைஞனின் பெயர் ஜான் கோம். நண்பன் பிரையன் ஆக்டனுடன் இணைந்து ஜான்கோம் உருவாக்கியதுதான் வாட்ஸ் ஆப். பிழைக்க வழி தேடிவந்த ஜான்கோமின் கடின உழைப்பில் உருவான வாட்ஸ் அப்தான் இன்று பலரின் வேலையை எளிதாக்கிக் வைத்திருக்கிறது ! ந.பா.சேதுராமன்

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha